Published : 10 Jan 2023 04:17 AM
Last Updated : 10 Jan 2023 04:17 AM

பழநி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும்: தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தல்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கைத் தமிழில்நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

பழநியில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு ஜன.27-ம் தேதி நடைபெற உள்ளது. கருவறை, வேள்விச் சாலை மற்றும் குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும். பிராமணர் அல்லாத தமிழ் அர்ச்சகர்களையும் குடமுழுக்கில் ஈடுபடுத்தி தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்தி, ஜன.20-ம் தேதி பழநியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். அறப் போராட்டமாகவும், ஆன்மிக நிகழ்வாகவும் நடைபெறும். ஆன்மிகச் சடங்குகள் நிறைந்த நிகழ்வாக இருக்கும். 2019-ம் ஆண்டு தஞ்சாவூர் கோயில் குடமுழுக்கின் போது பல்வேறு அமைப்புகள் இணைந்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம்.

அப்போதைய அரசு தாமாக முன்வந்து தமிழ் பாதி, சம்ஸ்கிருதத்தில் பாதியாக குடமுழுக்கு நடத்துவோம் என அறிவித்தது. அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்தி குடமுழுக்கு நடத்தப்பட்டது. தமிழ் மந்திர புத்தகங்களை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. எனவே, பழநி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், பதிணென் சித்தர் பீடம் சித்தர் மூங்கிலடியார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x