பேசும் படங்கள்: வார்தா புயல் விளைவுகள்

பேசும் படங்கள்: வார்தா புயல் விளைவுகள்
Updated on
5 min read

கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வகையில், புரட்டிப்போட்ட அதிதீவிர 'வார்தா' புயலின் கோரத்தாண்டவத்தால் தலைநகர் சென்னை சின்னா பின்னமானது. கனமழை, மரங்கள் வேருடன் சாய்ந்தது, போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு என மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை விளக்கும் படங்களின் சிறப்புத் தொகுப்பு.


கடற்கரை சாலையில் நேற்று மாலை போதுமான வெளிச்சம் இல்லாதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி அருகே சாலையோரம் மரங்கள் விழுந்து கிடப்பதால் கனமழையில் ஓரமாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.(படம்: சி.காட்சன்)


காமராஜர் சாலையில் கடும் மழையில் விளக்குகளை எரியவிட்டபடி வரும் வாகனங்கள்.


கடும் புயல் காரணமாக காசிமேடு பகுதியில் கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள்.


பலத்த புயல் வீசிய நிலையிலும் குடையை பிடித்தபடி ஐ.சி.எஃப். அருகே சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞர்.


காமராஜர் சாலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடம் அருகே சாலையில் தேங்கிய மழை நீரில் செல்லும் வாகனங்கள்.


பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊர் செல்ல முடியாமல் தவித்த பயணிகள்


பலத்த மழை காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மழை நீர் ஒழுகியதால் காலியாக உள்ள பயணிகள் இருக்கைகள்.


பெரம்பூர், வீனஸ் சாலையோர மரம் பெயர்ந்து ஒரு வீட்டின் மீது விழுந்திருக்கிறதுபடம்: (எஸ்.பார்த்திபன்)


கோட்டூர்புரத்தில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மரம் (படம். ஆர்.ரகு)


டாக்டர் பெசன் ட் சாலையில் வாகனங்கள் மீது சரிந்து கிடக்கும் மரங்கள் (படம். கே.வி.ஸ்ரீநிவாசன்)


சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் மெதுவாகச் செல்லும் வாகனங்கள்.


காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சேப்பாக்கத்தில் கீழே விழுந்து கிடக்கும் இருசக்கர வாகனம்.


அயனாவரத்தில் ஓடிக்கொண்டிருந்த வாகனம் மீது மரம் விழுந்தது. இதில் வந்த வாகன ஓட்டி நூலிழையில் தப்பினார்.


சேதமடைந்துள்ள கண்ணகி சிலை பேருந்து நிறுத்தம்.


போரூரில் சாலையில் தேங்கிய மழை நீரில் நீந்தியபடி வரும் வாகனங்கள்.(படம்: சி.காட்சன்)


சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் சாலையில் வரிசையாக விழுந்து கிடக்கும் மரங்கள்.


சென்னை மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகில் சாலையில் ஏரி போல் தேங்கிய மழை நீர்.


மெரினா கடற்கரைச் சாலை உழைப்பாளர் சிலை அருகே விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.


துறைமுகம் அருகே வழியை மறித்து விழுந்து கிடக்கும் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர்.


சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே சாலையை முற்றிலும் மறித்து விழுந்து கிடக்கும் மரங்கள்.


நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் மரங்கள் விழுந்ததால் காட்டுக்குள் சிக்கிக் கொண்டது போல காட்சித் தரும் வாகனம்.


ஆள் நடமாட்டம் இல்லாமல் இருள் சூழ்ந்து வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரையோர நடைபாதை.


நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் புகுந்த மழைநீர்.


சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியில் பலத்த சூறைக் காற்றால் தள்ளாடும் தென்னை மரங்கள்(படம்: ஜி.கிருஷ்ணசுவாமி)


நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் மரம் விழுந்ததால், சேதமடைந்த கார் (படம்: தினேஷ் கிருஷ்ணன்)


கோட்டூர்புரம் பகுதியில் மரம் விழுந்ததால் சேதமடைந்த கார் (படம். ஆர்.ரகு)


சென்னை காமராஜர் சாலையில் புயல் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் கட்டிடத்தின் மீது விழுந்த விளம்பரப் பலகை (படம். கே.வி.ஸ்ரீநிவாசன்)


சத்யம் திரையரங்கின் முன்னே வைக்கப்பட்டிருந்த சினிமா விளம்பரப் பதாகைகள் கிழிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.


வாலாஜா சாலையில் உள்ள உணவகத்தின் பெயர்ப் பலகை பலத்த காற்றின் காரணமாக கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.


கதீட்ரல் சாலையில் மரத்துடன் சேர்ந்து சாலையின் குறுக்கே விழுந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் (படம். ஆர்.ரகு)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in