

சென்னை: சென்னை மாம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்கு வசதியாக அப்பகுதிகளில் இன்றுமுதல் 15 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமணி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகுரக வாகனங்கள் தியாகராய கிராமணி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, அவை தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும்ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படும். மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.