எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்!

எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்!
Updated on
1 min read

எம்ஜிஆர் சமாதி அருகில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மத்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிலதாவின் உடல், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில், ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியைப் பொறுத்தவரை, தமிழக அரசின் செய்தித்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. தற்போது, இந்த இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டப்படி, கடற்கரை ஓரங்களில் எந்த கட்டுமானங்களையும் எழுப்பக் கூடாது. ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட வளாகம் என்பதால், தமிழக அரசின் ஒப்புதலுடன், இதில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது.

அதே நேரம், நினைவிடம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசை நாட வேண்டும். எனவே, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆவணங்களை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து விலக்கு பெற்று, விரைவில் நினைவிடம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in