Published : 09 Jan 2023 04:23 AM
Last Updated : 09 Jan 2023 04:23 AM

மனிதர்களிடம் உள்ள தாய்ப்பாசம் இறுதி வரை மறையாது: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

லட்சுமிதேவி அம்மையாரின் உருவப்படத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்த வைத்தார். அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்.படம். வி.எம்.மணிநாதன்.

வேலூர்: விலங்குகளிடம் உள்ள தாய்ப்பாசம் குறிப்பிட்ட காலத்தில் மறைந்து விடும். ஆனால், மனிதர்களின் தாய்ப்பாசத்தை என்றுமே மறக்க மாட்டார்கள். அனைத்தையும் துறந்த ஆதிசங்கரரும், பட்டினத் தாரும் இறுதியில் தாய்ப்பாசத்தை துறக்காமல் இருந்தனர் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் மனைவி ரமணியின் தாயார் லட்சுமிதேவியின் மறைவை யொட்டி அவரது உருவப்படம் திறப்பு விழா காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள திருமண மண்டபத் தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவ நாதன் தலைமை வகித்து பேசும் போது, ‘‘தமிழர்களின் கலாச்சாரம் என்பது உபசரிப்பு தான்.

அதை சரியாக செய்தவர் என் சம்மந்தி லட்சுமி தேவி அம்மாள். வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர். ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி அமைந்து விட்டால் அவனுக்கு எல்லாமும் கிடைத்துவிடும். நான் கல்லூரியில் படிக்கும்போதே நானும், அமைச்சர் துரைமுருகனும் நெருங்கிய நண்பர்கள்.

ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகினோம். கட்சி பாகுபாடு இல்லாமல் தற்போது வரை அதே நட்பு தொடர்கிறது. அவர் முதன் முதலாக அமைச்சராக பதவி ஏற்றபோது நான் அதிமுக மாவட்டச்செயலாளர் அப்போதே நான் நேரில் என்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். அந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது’’ என்றார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு லட்சுமி தேவி அம்மையாரின் உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு, அவர் பேசும்போது, ‘‘லட்சுமிதேவி அம்மையார் விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு சம்மந்தி, துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு மாமியார், எனக்கு அவர் வாக்காளர்.

தேர்தல் வந்தாலே காட்பாடி தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலத்தில் எனக்காக வாக்கு சேகரித்தவர் லட்சுமி தேவி அம்மையார். அவரின் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது பாராட்ட வேண்டும். அந்த வகையில் சம்மந்தி லட்சுமிதேவி அம்மாளுக்கு மரியாதை செலுத்த கோ.விசுவநாதன் எடுத்துள்ள செயல் பெருமைக்குரியது.

நான் கல்லூரி மாணவராக இருந்த போது யாரையும் மதிக்க மாட்டேன். என்னை சிலையாக செதுக்கியவர் கோ.விசுவநாதன். எப்படி பேச வேண்டும், எப்படி பழக வேண்டும் என சொல்லிக்கொடுத்த ஆசான். இன்றும் எங்கள் நட்பு தொடர்கிறது. அந்த காலங்களில் குழந்தை களை பெற்றெடுக்க பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். அதனால், பாசம் மேலோங்கியிருந்தது.

தற்போது அறுவை சிகிச்சை மூலம் நிறைய பேர் குழந்தை பெற்றெடுப் பதால் பாசம் குறைந்து வருகிறது. தாய்ப்பாசம் என்பது எல்லா உயிர்களிடமும் இருக்கிறது. விலங்குகளிடம் இருக்கும் தாய்ப் பாசமானது ஒரு காலத் திற்கு பிறகு மறந்துவிடும். ஆனால், மனிதர்களிடம் தாய்ப்பாசம் எளிதில் மறையாது.

இந்த உலகில் தாய்ப்பாசத்துக்கு ஈடு இணையும் எதுவுமே இல்லை. அனைத்தையும் துறந்த ஆதிசங்கரரும், பட்டிணத் தாரும் இறுதியில் தாய்ப்பாசத்தை துறக்கவில்லை. அந்த வகையில், மறைந்த தனது தாயாருக்கு மரியாதை செலுத்த சங்கர் விசுவநாதனின் மனைவி ரமணி மேற்கொண்டுள்ள செயல் பாராட் டுக்குரியது" என்றார்.

நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ரத்தினகிரி பால முருகனடிமை சுவாமிகள், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்தி கேயன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமர், விஐடி துணைத் தலைவர்கள் சேகர் விசுவ நாதன், ஜி.வி.செல்வம், உதவித் துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x