அடையாறு பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் முதல்வர்

சென்னை அடையாறு பூங்காவில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பிரம்ம ஞான சபையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.
சென்னை அடையாறு பூங்காவில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பிரம்ம ஞான சபையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.
Updated on
1 min read

சென்னை: சென்னை அடையாறு பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கினார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிகாலையில் யோகா செய்வது மற்றும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சைக்கிளில் பயணம்மேற்கொள்கிறார். அதேபோல், சென்னை அடையாறு தியோசோஃபிகல் சொசைட்டி பூங்காவில் தினமும் வாக்கிங் செல்வதை முதல்வர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வாக்கிங் சென்றபோது, பூங்கா ஊழியர்கள் மற்றும் அங்குள்ள பிரம்ம ஞான சபை பணியாளர்கள் உட்பட 140 பேருக்கு கரும்பு மற்றும் பொங்கல் பை உள்ளிட்ட பொங்கல் பரிசை முதல்வர் வழங்கினார். பொங்கல் பரிசைபெற்று கொண்ட ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in