சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வசிக்கும் 4ஆயிரம் பேருக்கு பொங்கல்பரிசு பொருட்கள், புத்தாடைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45,000-க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு, தொகுதியின் எம்எல்ஏவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து பொங்கல் பரிசுப்பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வழங்க முடிவு செய்தார்.

அதன்படி, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்துஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப்பொருள்கள் மற்றும் புத்தாடைகளை வழங்கி வருகிறார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட புதுப்பேட்டை நாராயண நாயக்கர் தெரு, ராயப்பேட்டை நைனியப்பன் தெரு, சுப்பராயன் தெரு சந்திப்பு, ராயப்பேட்டை பூரம் பிரகாசம் தெரு, மயிலாப்பூர் சிஐடி காலனி காட்டு கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 4,000 பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, சென்னை மாநகராட்சி 9-வது மண்டலக் குழுத் தலைவர் மதன் மோகன், மாமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in