

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்தில் மலமஞ்சனூர் ஊராட்சி உள்ளது.
இதன் திமுக செயலாளர் ஜாகீர் உசேன், ஜமாத் கமிட்டி தலைவர் நாசர்கான் ஆகியோர் தலைமையில், 100 பெண்கள் உள்ளிட்ட 200 இஸ்லாமியர்கள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.