

வறட்சி காரணமாக நாகப்பட்டினம் அருகே 2 விவசாயிகளும், அரிய லூர் அருகே ஒரு விவசாயியும் மாரடைப்பால் மரணம் அடைந் துள்ளனர். மேலும் விளாத்திகுளம் அருகே விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
நாகை அருகே திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கண்ணன்(45). இவர், குத்தகைக்கு எடுத்துள்ள, அரை ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீ ரின்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மனவேதனையில் இருந்த கண்ணன் நேற்று முன்தினம் வயலுக்கு சென்று திரும்பிய நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல, வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் ராமர் மடத்தைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமி(70), தனக்கு சொந்த மான 3 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீ ரின்றி பயிர்கள் கருகிய நிலை யில், பயிர் சாகுபடிக்கு வாங்கிய கடன்களை எப்படி அடைப்பது என்று புலம்பியபடி இருந்த அவருக்கு, நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அரியலூர் அருகே…
அரியலூர் மாவட்டம் திருமா னூர் அருகேயுள்ள சேனாபதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கு.ராமையன்(67). இவருக்கு 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்பில் போர்வெல் போட்டுள்ளார். ஆனால், அதன் மூலம் கிடைத்த தண்ணீர் உவர் நீராக இருந்ததால், வயலுக்கு பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி எள் விதைத் துள்ளார். இந்நிலையில், ராமை யன் நேற்று காலை வயலுக்குச் சென்றபோது, மாரடைப்பு ஏற் பட்டு, மயங்கி வயலில் விழுந்த அவர் அங்கேயே இறந்தார்.
பயிர்கள் கருகுவதைக் கண்டு 3 விவசாயிகள் உயிரிழந் திருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவத்தில் தூத் துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்த சு.பவுன்ராஜ் (60) என்ற விவசாயி தனக்கு சொந்தமான ஏக்கர் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம், உளுந்து, மிளகாய் போன்ற வற்றை பயிரிட்டிருந்தார். ஆனால் பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகிவிட்டன. இதனால் வேதனையில் இருந்த பவுன்ராஜ் களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.