உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது

உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது

Published on

சென்னை: நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் ஜன.26-ம் தேதிகொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும்.

ஆனால், தற்போது அங்குமெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தின நிகழ்ச்சியை அப்பகுதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தலைமைச் செயலர், பொதுத்துறை செயலர்உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும்காவல் துறையினர் நடத்தியஆலோசனைக்குப் பிறகு, உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தினவிழாவை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும்ஜன.20,22,24 ஆகிய 3 தினங்களும் இப்பகுதியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in