

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் ஈமச்சடங்கு நிதி ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.
புதுவை அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அட்டவணை மற்றும் பழங்குடி இனத்தவருக்கு வழங்கப்படும் ''ஈமச்சடங்கு நிதியுதவி'' உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான கோப்புக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, புதுவை மாநிலத்தைச் சேர்ந்த அட்டவணை மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்படும் ''ஈமச் சடங்கு நிதியுதவி'' ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில் திருத்தம் செய்யும் வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.