

கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.
அரசியல் பிரமுகர்களின் செல்வாக் கோடு தமிழகத்தில் உள்ள பல கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வருகின்றன.
இந்நிலையில் நேற்று கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவுன் துணை இயக்குநர் ராஜசேகர் தலைமையில் செயல் அலுவலர் லோமேஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது. கடந்த சில நாட்களில் அதிகமாக பணம் டெபாசிட் செய்தவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 29 கிளைகள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் 2 நகர கூட்டுறவு வங்கிகளும், 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளைகளும் உள்ளன. அனைத்து வங்கி கிளைகளின் கணக்குகளையும் அமலாக்கதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.