மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜன.10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட வற்றுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இதையடுத்து, ஜன.3-ம் தேதிதொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இது தொடர்பாகத் தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ``கடந்தபேச்சுவார்த்தையில் எங்களதுகோரிக்கை தொடர்பாக வாரியம்தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக ஊதிய உயர்வு தொடர்பாக ஒரு முன்மொழிவு கூட எடுத்து வரவில்லை. அரசு ஒப்புதல் அளிக்கக் காத்திருக்கிறோம் என்று கூறினர்.

எங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மின்வாரியம் தானே தவிர அரசு அல்ல. எங்களதுகோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in