ஜன.10-ல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: அரசு தலைமை கொறடா அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வரும் 10-ம் தேதி காலை 11 மணியளவில் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 10.01.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கப்படவுள்ளது. முன்னதாக, நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in