கிருத்திகா உதயநிதி | கோப்புப் படம்
கிருத்திகா உதயநிதி | கோப்புப் படம்

நேசத்தை வெளிப்படுத்த அச்சம் வேண்டாம்: கிருத்திகா உதயநிதி

Published on

சென்னை: “நேசிக்கவும், அதனை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம்” என்று கிருத்திகா உதயநிதி கருத்துப் பகிர்ந்துள்ளார்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதியின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் இருப்பது போன்ற தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்களின் உண்மைத் தன்மை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

எனினும், இன்ப நிதியை விமர்சிக்கும் வகையில் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். அதேநேரத்தில், மற்றொரு தரப்பினர் ‘இது இன்பநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை. இதை விமர்சித்துப் பகிர யாருக்கும் உரிமை இல்லை’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எதைப் பற்றியும் குறிப்பிடாமல் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி பதிந்துள்ள ட்வீட் கவனமும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேசிக்கவும், அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மேன்மையுடன் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in