

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்," மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி. மமதா பானர்ஜிக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எப்போதும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்." இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.