Published : 23 Dec 2016 08:51 AM
Last Updated : 23 Dec 2016 08:51 AM

தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ஆளுநர், முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை

முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் தகவல்

தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவ தற்கு எந்தவித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு முன்கூட் டியே தகவலும் தெரிவிக்க வேண் டியதில்லை என்கிறார் முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் (தமிழ்நாடு) எஸ்.செந்தாமரைக்கண்ணன்.

நேற்று முன்தினம், தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் அவருக்கு தொடர் புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் ஆவ ணங்களை ஏராளமான அளவில் கைப்பற்றினர். இந்த சோதனைகள் குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியான நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனையிடும் முன்னதாக முதல மைச்சர், ஆளுநர் உள்ளிட்டவர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற சர்ச்சை யையும் சிலர் எழுப்புகின்றனர். ஆனால், அப்படி யாரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் செந்தாமரைக் கண்ணன்.

அனுமதி தேவையில்லை

“போதிய முகாந்திரம் இருந்தால் வருமான வரித்துறையினர் எந்த இடத்திலும் சோதனை மேற் கொள்ள முடியும். இதில் தனிப் பட்ட முறையில் யாருக்கும் எவ் வித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஒரு இடத்தில் சோதனைக்கு செல்லும் முன்பாக அதற்கான முகாந்திரங்களை உள்ளடக்கிய திருப்தி குறிப்பு (Satisfaction Note) ஒன்றை வருமான வரித்துறையின் துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தயார் செய்வார்.

அந்தக் குறிப்பு வருமானவரித் துறை இயக்குநர் (விசாரணை) பார்வைக்கு வைக்கப்படும். குறிப் பில் உள்ள தகவல்களில் தனக்கு திருப்தி இருந்தால் அதை வரு மான வரித்துறையின் தலைமை இயக்குநருக்கு (விசாரணை) அனுப்புவார் இயக்குநர். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நபர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்த தலைமை இயக் குநர் வாரண்ட் பிறப்பிப்பார். இதை யடுத்து முறைப்படி சோதனைகள் தொடங்கும்.

மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்ப வர்களிடம் சோதனைக்கு செல்வ தாக இருந்தால் அதுகுறித்து மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தின் தலைவர், மத்திய வருவாய்த் துறை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போது மானது. இவர்கள் மூலமாக இந்தத் தகவல் மத்திய நிதியமைச்சருக்கு தெரிவிக்கப்படும்’’ என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

சோதனை எப்படி நடத்தப்படும், சோதனையில் கைப்பற்றப்படும் சொத்துகள் எப்படி கையாளப்படும் என்று அவரைக் கேட்டபோது, “மத்திய அரசு அதிகாரிகள் இருவர் முன்னிலையில்தான் சோதனைகள் நடைபெறும். சோதனையில் கைப் பற்றப்படும் பொருட்கள், சோதனை தொடங்கிய நேரம், சோதனை முடிந்த நேரம், சோதனை நடந்த இடத்தில் இருந்தவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ‘பஞ்ச்நாமா` (Panchnama) என்ற மகஜரில் எழுதப்படும். சோதனை யின் முடிவில் அந்த மகஜரில் வழக்கு சம்பந்தப்பட்ட நபரிடமும் சாட்சிகளிடமும் கையெழுத்துப் பெறப்படும்.

சோதனையில் கைப்பற்றப்படும் நகைகள், சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அலுவலகத்தின் ‘ஸ்டாராங் ரூமில்’ பாதுகாப்பாக வைக்கப்படும். சொத்துப் பத்திரங் கள் உள்ளிட்ட ஆவணங்கள், வழக்கை விசாரிக்கும் வருமான வரித்துறை அதிகாரியின் பொறுப் பில் இருக்கும்’’ என்றார்.

வழக்கு விசாரணை எப்படி இருக்கும்? இறுதித் தீர்ப்பு எப் போது வரும்? கைப்பற்றப்பட்ட பொருட்களை திரும்பப் பெறமுடி யுமா என்ற கேள்விகளுக்கும் பதிலளித்த செந்தாமரைக்கண் ணன், “கைப்பற்றப்பட்ட ஆவணங் களை சம்பந்தப்பட்ட நபரின் வரு மானத்துடன் ஒப்பீடு செய்து அறிக்கை தயார் செய்வதற்கு 21 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும். விசாரணை முடிவில், வருமான வரி கட்ட வேண்டி இருந்தால் அதற் கான தொகை போக மீதியை உரியவரிடம் ஒப்படைப்பார்கள். ஆனால், 90 சதவீத வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட நபர்தான் கூடுதலாக வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.

முதல்கட்ட தீர்ப்பை எதிர்த்து முதலில் வருமான வரித்துறை (மேல்முறையீடு) ஆணையரிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் திருப்தி இல்லாவிட்டால் வருமானவரித் துறையின் மேல் முறையீட்டு நடுவர் மன்றத்தை அணுகலாம். இதற்கு அடுத்தபடி யாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் போக முடி யும். எனவே, ராமமோகன ராவ் மாதிரியான அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வழக்குகளில் இறுதித் தீர்ப்பை எட்டுவதற்கு 10 ஆண்டுகள்கூட ஆகலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x