Published : 05 Jan 2023 06:56 AM
Last Updated : 05 Jan 2023 06:56 AM

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. கடந்தாண்டு நவ.9-ம் தேதி முதல் டிச.8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியல்படி, 6,18,26,182 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இறுதி நாளான டிச.8-ம் தேதி நிலரவரப் படி, பெயர் சேர்க்க 10,34,018 விண்ணப்பங்கள், பெயர் நீக்க 7,90,555 விண்ணப்பங்கள் உட்பட 23,03,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன்படி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன்று அனைத்து மாவட்டங்களிலும் வெளியாகிறது. இதையடுத்து, தேசிய வாக்காளர் தினமான ஜன.25-ம் தேதி புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x