Published : 05 Jan 2023 06:39 AM
Last Updated : 05 Jan 2023 06:39 AM

திருவண்ணாமலை | பருவதமலைக்கு மாற்றுப்பாதை: ட்ரோன் கேமராவில் ஆய்வு

பருவதமலையில் மாற்றுப்பாதை அமைப்பது குறித்து ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் மற்றும் கடலாடி ஆகிய கிராமங்களுக்கு இடையே 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை உள்ளது. தென்கயிலாயம் என அழைக்கப்படும் பருவதமலை உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.

ஏணிப்படி, செங்குத்தான பாதை, தொங்கு பாலம் உள்ளிட்டகடினமான பாதையைக் கடந்து பருவதமலை உச்சியை பக்தர்கள் சென்றடைவர்.

இதனால், பருவதமலைக்கு எளிதாக சென்று வர மாற்றுப் பாதை அமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், மாற்றுப் பாதை அமைப்பது குறித்து நேற்று முன்தினம் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு நடத்தப்பட்டடது. மாற்றுப் பாதை இறுதி செய்யப்பட்டதும், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x