போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: பெருங்குடியில் நாளை முதல் தொடக்கம்

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: பெருங்குடியில் நாளை முதல் தொடக்கம்
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்காக நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு சென்னை பெருங்குடியில் ஆண்டு முழுவதும் வாராந்திர கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடங்குகிறது.

போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டு முழு வதும் வாரம்தோறும் இந்த வகுப்பு நடைபெறும். சென்னையில் நீர்வழி அமைப்பின் சார்பில் நடைபெறும் இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் சேரலாம்.

இதன்படி, நாளை முதல் அடுத்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த வகுப்புகள் நடைபெறும். காலை10 முதல் மாலை 4 மணி வரை, 291,4-வது பிரதான சாலை, பர்மா காலனி, பெருங் குடி, சென்னை-96 என்ற முகவரியில் வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங் களுக்கு 9444453588, 8056176788, 94893 09947 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in