

ஆந்திராவைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன். இவரது இரு மகன் களும் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தனர். கோடை விடு முறையில் மாணவர்கள் இருவ ரும் குடும்பத்தைக் காப்பாற்று வற்காக கட்டிட வேலைக்காக சென்னை வந்துள்ளனர். துரதிருஷ் டவசமாக இருவரும் மவுலிவாக் கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு மகன் என்ன ஆனார் என்பது தெரியாமல் சூரியநாராயணன் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபற்றி சூர்யநாராயணன் கூறுகையில், ‘‘எங்களது பெற்றோர் முடிதிருத்தும் வேலை செய்து வந்தவர்கள். கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்தோம். கல்லூரி விடுமுறை நாளில் குடும்ப வறுமையை கருதி இருவரும் வேலைக்கு செல்வதாக கூறினர். தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதால் மவுலிவாக்கத்துக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், கட்டிடம் இடிந்து விழுந்ததில் என் மகன்கள் சிக்கிக் கொண்டனர். ஒரு மகனை இழந்துவிட்டோம். இன்னொருவன் உயிருடன் மீட்கப்படுவானா என்று காத்திருக்கிறோம்’’ என்றார்.