கோவை வழியாக எர்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046) எர்ணா குளத்திலிருந்து

வரும் 12-ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றடையும். இதேபோல, சென்னை சென்ட்ரல்-எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06045), சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 13-ம் தேதி மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு,

மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். செல்லும் வழியில் இந்த ரயில்கள், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in