Published : 05 Jan 2023 06:14 AM
Last Updated : 05 Jan 2023 06:14 AM

செங்கை - திண்டிவனம் சாலை விரிவாக்கம் தொடர்பான நிலுவை பணியை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம், அமைச்சர் வேலு வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சாலை விரிவாக்க நிலுவைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம், தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழகபொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். அப்போது அவருடன், ஆ.ராசா எம்பி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் இருந்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், அமைச்சர் வேலு கடிதம் ஒன்றை அளித்தார். அதில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவாக முடிக்கவும், ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளை அகற்றக் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் பல்வேறு நிலைகளில் காலதமாதமாக நடைபெற்றுவருகிறது என்பதை ஆய்வுக்கூட்டத்தின்போது முதல்வர் தெரிவித்தார். அத்துடன், மத்திய அமைச்சர்நிதின் கட்கரியை சந்தித்து நிலுவைப் பணிகளை விரைவாக செயல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்றார். அதன்படி, பல்வேறு சாலைகள் தொடர்பான கடிதங்கள்மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்ட சாலை அமைப்பது, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இப்பணியை வலியுறுத்தியுள்ளோம். மேலும், தாம்பரத்தில் இருந்துசெங்கல்பட்டு வரை சாலைகள்8 வழி சாலையாக விரிவாக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து செங்கை முதல் திண்டிவனம் வரைவிரிவுபடுத்தும் பணி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே 2 முறை இதுகுறித்து வலியுறுத்தியுள்ளோம். தற்போது 3-வது முறையாக பணிகளை தொடர வலியுறுத்தினேன்.

இதுதவிர, திருச்சிக்கு அருகில் உள்ள துவாக்குடி உயர்மட்ட சாலை, பெரும்புதூர் முதல்பூந்தமல்லி வரையிலும் அதன்பின்மாதவரம் பகுதியிலும் உயர்மட்டசாலைகள் அமைக்க வேண்டும்என ஏற்கெனவே கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. அப்பணிகளை இந்தஆண்டே தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுங்கச்சாவடிநகரப்பகுதியில் அமைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு அந்த சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

இது தொடர்பாக அங்குள்ளவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். அதை நானும் துறை செயலரும் மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்து கூறியுள்ளோம். அவரும் உடனே அதற்கானஅலுவலரை அழைத்து, மாற்று வழிஅமைத்துத்தர அறிவுறுத்தினார். இதே போல், கப்பலூர் சுங்கச்சாவடியையும் இதே போன்று மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளோம்.

மேலும், பல்வேறு பகுதிகளில்அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தம் முடிவுற்றவை 40சதவீதம் குறைக்கப்படும் என்றுநாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் வில்சன் கேள்விக்கு அமைச்சர் நிதின்கட்கரி பதிலளித்திருந்தார். இது தொடர்பான விவரங்களை அளித்தோம். நேரம் முடியும் போது மாற்றி அமைப்போம் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சேலம், உளுந்தூர்பேட்டை சாலையில் பல இடங்களில் 4 வழி, சில இடங்களில் 2 வழிச்சாலையாக உள்ளது. இதுதவிர 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே கள்ளக்குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலைகள் பழுதடைந்துள்ளன.

இதையடுத்து, புதிய ஒப்பந்ததாரரை நியமித்து அப்பணிகளை தொடங்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற முதல்வரின் கருத்தை தெரிவித்தோம். அனைத்து பணிகளையும் விரைவாக இந்த ஆண்டே முடிக்க முயற்சி எடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x