அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அந்தமான் அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, லட்சத்தீவு வழியாக அரேபியாவை நோக்கி சென்றுவிட்டது. இதற்கிடையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று தெற்கு அந்தமான் அருகே உருவாகியுள்ளது. இதன் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து, அடுத்த இரு நாட்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்து தீர்மானிக்கப்படும்.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மட்டும் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in