தொட்டில் குழந்தை திட்டத்தால் 4,498 குழந்தைகள் மீட்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

தொட்டில் குழந்தை திட்டத்தால் 4,498 குழந்தைகள் மீட்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் வரை 4,498 குழந்தைகள் காப்பாற்ற ப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவை யில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.

சட்டப்பேரவையில் சமூகநலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பா.வளர்மதி திங்கள்கிழமை கூறியதாவது:

பெண் குழந்தைகளை இறப்பின் பிடியில் இருந்து காப்பாற்ற ‘தொட்டில் குழந்தை திட்டத்தை’ முதல்வர் ஜெயலலிதா 1992-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். பின்னர் இத்திட்டம் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட் டத்தின் கீழ் கடந்த மே 31-ம் தேதி வரை 779 ஆண் குழந்தைகள், 3,719 பெண் குழந்தைகள் என மொத்தம் 4,498 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.

திருநங்கைகளுக்கு உதவி

திருநங்கைகள் நலனுக்காக முதல்வர் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தினேஷ்குமார் என்ற திருநங்கை சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பில் சேர்ந்து ள்ளார். சென்னை வட் டாரத்தில் அரசு கல்லூரியில் ஒரு திருநங்கை உயர்கல்விக்காக சேர்ந்திருப்பது இதுவே முதல்முறை. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து என்ற திருநங்கைக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.48,280 வழங்கப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை 11 லட்சத்து 79 ஆயிரத்து 963. இதுவரை 10 லட்சத்து 75 ஆயிரத்து 189 பேருக்கு மருத்துவச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 10,939 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

சத்துணவுக்கு ரூ.1412 கோடி

சத்துணவுத் திட்டத்துக்கு இந்த ஆண்டு (2014-15) ரூ.1,412.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு நிதி ரூ.511 கோடி. தமிழக அரசு நிதி ரூ.901.88 கோடி. தமிழகத்தில் மட்டும்தான் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 3 பதவிகள் உள்ளன. அவர்களுக்கு முறையே ரூ.6780, ரூ.3980, ரூ.3080 சம்பளம் வழங்கப்படுகிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தில் சமையலர் பதவி மட்டுமே உள்ளது. கேரளத்தில் சமையலருக்கு தினக் கூலியாக ரூ.100 கொடுக்கின்றனர். கர்நாடகத்தில் ரூ.1200, ஆந்திரத் தில் ரூ.1000 சம்பளம் தரப்படுகிறது.

தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, இதர சலுகைகள் உண்டு. மற்ற மாநிலங்களில் இல்லை. தமிழகத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் களுக்குத்தான் சம்பள உயர்வு, பதவி உயர்வு, சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in