சென்னை மத்திய கோட்டம்: ஜன.7-ல் அனைவருக்கும் ஆதார் 3.0 சிறப்பு முகாம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இந்திய அஞ்சல் துறையின் ‘அனைவருக்கும் ஆதார் 3.0’-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆதார் புதிய பதிவுகள், முகவரி புதுப்பிப்பு, புகைப்படம் / பயோமெட்ரிக் அப்டேட், பெயர் / பாலினம் / பிறந்த தேதி அப்டேட், மொபைல் / இ-மெயில் அப்டேட், 5 வயது மற்றும் 15 வயது சிறுவர் / சிறுமியருக்கான கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் பின்வரும் அஞ்சலகங்களில் நடைபெற உள்ளது.

1. தியாகராய நகர் HO
2. சூளைமேடு அஞ்சல்
3. கிரீம்ஸ்சாலை PO
4. தியாகராய நகர் வடக்கு அஞ்சல்
5. மயிலாப்பூர் HO
6. கோபாலபுரம் அஞ்சல்
7. ராயப்பேட்டை அஞ்சல்
8. தேனாம்பேட்டை அஞ்சல்
9. திருவல்லிக்கேணி அஞ்சல்

முகாம் இடம்:

  • சென்னை நடுநிலைப்பள்ளி, டிரஸ்ட்புரம், சென்னை 600024
  • ஜெயின்பள்ளி, தி.நகர், சென்னை 600017
  • விசாலம் பிளாட், பாலு முதலி தெரு, திநகர், சென்னை 600017
  • பி கே மஹால், சித்திரைகுளம், மயிலாப்பூர் HO, சென்னை 600004
  • ரத்தம்மாள் தெரு, ஆசாத் நகர், சென்னை 600094
  • Hindu Hr Sec பள்ளி, சேப்பாக்கம், சென்னை 600005
  • ஜவஹர் உசேன் தெரு குடி இருப்போர் நலசங்கம், ராயப்பேட்டை, சென்னை 14
  • ஜவஹர் உசேன் தெரு குடி இருப்போர் நலசங்கம், ராயப்பேட்டை, சென்னை 14
  • Hindu Sec sr பள்ளி, சேப்பாக்கம், சென்னை 600005
  • அங்கன்வாடி, போயஸ் சாலை 1வது தெரு, சென்னை 600086
  • அங்கன்வாடி பள்ளி, ஏரிபகுதி 4வது தெரு, சென்னை 600034
  • ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஜிஎம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14

இந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு ஆதார் சேவைகளை பயன்பெறுமாறு பயனர்களை கேட்டுக் கொள்கிறோம். கட்டணங்கள்:

  • புதிய பதிவுகள் / 5 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் கட்டாய பயோமெட்ரிக் மாற்றங்கள்: இலவசம்
  • பயோமெட்ரிக் மேம்படுத்தல்கள் (விரல் அச்சுகள் மற்றும் கருவிழி மாற்றங்கள்): ரூ.100/-
  • Demographic மாற்றங்கள் (மொபைல்/ முகவரி/ பாலினம்/ DOB): ரூ. 50/-
  • இது சென்னை மத்திய கோட்டம், முதுநிலை கண்காணிப்பாளர் அஞ்சல்துறை, சென்னை 600 017 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in