

தெற்கு அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுவதால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நிலவி வருகிறது. இதன் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது.
இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற் றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். 26-ம் தேதியிலிருந்து சில தினங் களுக்கு தென் தமிழக பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை யில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும்.
அதிகபட்ச வெப்பநிலை யாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்கும் மழை பொழிவு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.