Published : 04 Jan 2023 12:20 PM
Last Updated : 04 Jan 2023 12:20 PM

சென்னை | ரூ.866.34 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் - 6 லட்சம் மக்கள் பயன் பெறுவர் 

பாதாள சாக்கடை திட்டம் | கோப்புப் படம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.866.34 கோடி மதிப்பீட்டில் சென்னை விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி பாதாள சாக்கடை வசதி இல்லாத புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.866.34 கோடி மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், இராமாபுரம், மடிப்பாக்கம், நெற்குன்றம், பள்ளிக்கரணை பகுதிகள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட் மதனங்குப்பம், ஒரகடம், வெங்கடாபுரம், கள்ளிகுப்பம் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் விவரம்: மணலி மண்டலம்: ரூ.60.89 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலத்திற்குட்பட்ட சிபிசிஎல் நகர், சின்னமாத்தூர் சாலை, திருவேங்கடம் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்மூலம் 7,182 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 58,210 பொதுமக்கள் பயன்பெறுவர். ரூ.22.60 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலத்திற்குட்பட்ட சின்னசேக்காடு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்மூலம் 3,102 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 23,680 பொதுமக்கள் பயன்பெறுவர்.

அம்பத்தூர் மண்டலம்: ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட மதனங்குப்பம், ஒரகடம், வெங்கடாபுரம் மற்றும் கள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2,100 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 32,500 பொதுமக்கள் பயன் பெறுவர்.

வளசரவாக்கம் மண்டலம்: ரூ.101.90 கோடி மதிப்பீட்டில் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்மூலம் 9,078 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 67,122 பொதுமக்கள் பயன்பெறுவர்.ரூ.64.82 கோடி இராமாபுரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 6,797 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 82,700 பொதுமக்கள் பயன்பெறுவர். ரூ.100.35 கோடி மதிப்பீட்டில் நெற்குன்றம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்மூலம் 5,845 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 1,14,000 பொதுமக்கள் பயன்பெறுவர்.

ஆலந்தூர் மண்டலம்: ரூ.55.95 கோடி மதிப்பீட்டில் ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்மூலம் மேற்கண்ட பகுதியில் 5,100 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 38,050 பொதுமக்கள் பயன்பெறுவர். ரூ.99.71 கோடி மதிப்பீட்டில் முகலிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்மூலம் 5,800 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 39,000 பொதுமக்கள் பயன்பெறுவர்.

பெருங்குடி மண்டலம்: ரூ.249.47 கோடி மதிப்பீட்டில் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்மூலம் 10,856 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 58,177 பொதுமக்கள் பயன்பெறுவர். ரூ.92.15 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 3.586 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 89.360 பொதுமக்கள் பயன்பெறுவர்.

மொத்தம்: ரூ.866.34 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 59 ஆயிரத்து 446 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 6 லட்சத்து 2 ஆயிரத்து 799 பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x