Published : 04 Jan 2023 04:43 AM
Last Updated : 04 Jan 2023 04:43 AM

சென்னை - டெல்லி இடையே புதிதாக 4 விமான சேவைகளை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது

சென்னை: சென்னை - டெல்லி இடையே புதிதாக 4 விமான சேவைகளை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னை - டெல்லி, டெல்லி - சென்னை இரு மார்க்கங்களிலும் தினமும் 38 விமான சேவைகள் உள்ளன.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம், 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 7.50 மணி, பிற்பகல் 3.40 மணி, டெல்லியில் இருந்து சென்னைக்கு பிற்பகல் 2.45 மணி, இரவு 10.35 மணிக்கு புதிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதன்மூலம், சென்னை - டெல்லி - சென்னை இடையே தினமும் இயக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x