

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய் துள்ளது. அதிகபட்சமாக, திருவா ரூர் மாவட்டம் கொடவாசலில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காட்டில் 10 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 9 செ.மீ., ஈரோடு, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 8 செ.மீ., திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தலா 7 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர், சோளிங்கரில் 6 செ.மீ. மழை பெய்தது. கடலூர், காஞ்சிபுரம், தூத்துக் குடி மாவட்டங்களிலும் மழை பெய்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.