

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் மண்டலம் சார்பில் குடிசைமாற்று வாரியம் பெரும்பாக்கம் எழில் நகரில் உதவி ஆணையர் அன்னாம்மள் தலைமையில் நடந்த முகாமில் 77 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 73 மனுக்கள் தவிர மற்ற அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
ஆலந்தூரில்..
ஆலந்தூர் மண்டலம் சார்பில் பல்லாவரம் கன்டோன்மென்ட் கழக தொடக்கப்பள்ளியில் உதவி ஆணையர் திலகம் தலைமையில் நடந்த முகாமில் மொத்தம் 114 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 108 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளிடம் வழங்கப் பட்டது.