

சென்னை: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். கடந்த 2-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வதந்தி பரவத் தொடங்கியது.
இதற்கு விளக்கமளித்து அவர் வெளியிட்ட பதிவில், "நான் வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்செயலானது. என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை வைத்து சிலர் வேறுமாதிரி புரிந்துள்ளனர். நான் எழுதும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்காக மன்னிக்கவும்.
இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது என்பதால் அவ்வாறு தெரிவித்தேன். ஒவ்வொரு அமைச்சரும் ஒருநாள் அலுவலகத்தை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.