

முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் எந்தவித வன்முறையோ, அசம்பாவிதங் களோ இல்லை. சிறப்பான பாது காப்பு ஏற்பாடுகளால் இறுதி ஊர்வலமும் அமைதியாக முடிந்ததால் போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் இறந்தாலோ, அர சியலில் அசாதாரண சூழல் ஏற்பட் டாலோ தமிழகத்தில் வன் முறை களும் கடைகள் சூறையாடப்படு வதும் வாடிக்கை. இந்திரா காந்தி, எம்ஜிஆர், ராஜீவ் காந்தி மறைவின் போது, பல இடங்களில் வன்முறை வெடித்தது. அரசியல் கட்சிகளின் ‘பந்த்’ போராட்டங்களிலும் வன் முறை நடப்பதுண்டு.
ஆனால், ஜெயலலிதா மறை வையடுத்து எந்தவொரு அசம்பா விதமும் நடக்கவில்லை. மாநிலம் முழுவதும் அமைதி நிலவியது. மதுரையில் ஒரு பேருந்தின் கண்ணாடி உடைப்பு, அப்போலோ மருத்துவமனை முன்பு தடுப்புகள் மற்றும் நாற்காலிகளை உடைத்தது போன்ற சிறிய நிகழ்வுகள் மட்டுமே நடந்தன.
ஜெயலலிதாவின் மரணச் செய்தியை அறிவிப்பதற்கு முன்ன தாகவே தமிழகம் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி திரிபாதி மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்கள் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப் பட்டு, முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வணிகர்களும் தனியார் நிறு வனங்களும் நிலைமையை உணர்ந்து அடைத்துவிட்டனர். பேருந்து உள்ளிட்ட எந்த வாகனங் களும் ஓடவில்லை. இதுவும் வன்முறைகள் நடைபெறாமல் இருக்க காரண மாக அமைந்தது.
சென்னையில், போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள், போலீஸ் அதிகாரி ஒருவரின் சட்டையைப் பிடித்து தாக்கினர். ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தின்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ஒருவரை தொண்டர்கள் தாக்கினர். ஆனாலும் போலீஸார் அமைதியாக இருந்து வன்முறை கள் நடைபெறாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இளம் வயது போலீஸார்
சென்னையில் அப்போலோ மருத்துவமனை முன்பும் ஜெய லலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்க வளாகத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த போலீஸாரில் பெரும்பா லோர் இளம் வயதினர். இருந்தா லும், யார் மீதும் கோபப்படாமல், மிகுந்த பொறுப்புடன் அவர்கள் பணியாற்றியதைக் காண முடிந்தது.
இதுகுறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘நிலைமையை உணர்ந்து பாது காப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து போலீஸார், அதிகாரி கள் மற்றும் போலீஸாரின் பாது காப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, அதை அப்படியே செயல்படுத்தியதால் மட்டுமே இது சாத்தியமாயிற்று’’ என்றார்.
போலீஸாரின் பாதுகாப்புப் பணியை நேரில் பார்த்த பொது மக்கள் பலர் அவர்களுக்கு தண்ணீர், உணவு, பிஸ்கட் போன்றவற்றை கொடுத்தனர். போலீஸாரும் தங்கள் வீடுகளில் இருந்து உணவை வரவழைத்து சக போலீஸாருக்கு வழங்கினர். இரவு முழுவதும் உறங்காமலும், எந்த கோபத்துக்கும் இடம் தரா மலும் அமைதியாக பணியில் ஈடு பட்ட போலீஸாரை பொதுமக்க ளும் பாராட்டினர். இதுபோன்ற சூழல் தொடர வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
ஒரு சில தொண்டர்கள் ஜெயலலிதா இறந்த துக்கத்தில் உணர்ச்சிவசப்பட்டு சென்னையில் மட்டும் 2 இடங்களில் போலீஸாரை தாக்கினாலும் தமிழகம் முழுவதும் பொதுவாக அமைதியே நிலவி யது. மறைந்த தங்கள் தலைவிக்கு கட்சித் தொண்டர்கள் செலுத்திய மிகச் சிறந்த அஞ்சலி இது.