

கச்சத் தீவு புனித அந்தோணியார் தேவாலய புதிய கட்டிட திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் ராமேசுவரம் பிஷப்பை எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழர் தேசிய முன்னனி யின் இளைஞரணி செயலாளர் கே.திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், "கச்சத் தீவில் உள்ள பழமையான அந்தோணியார் ஆலயத்தை இடித்துவிட்டு, தற்போது புதிய ஆலயத்தை இலங்கை அரசு கட்டியுள்ளது.
ஆலய திறப்பு விழாவுக்கு தமிழகத்தில் இருந்து 3 படகுகளில் 100 பேர் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல் வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமி நாதன் வாதிடும்போது, "டிச. 7-ம் தேதி நடைபெற இருந்த கச்சத் தீவு ஆலய திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ் விழாவில் தமிழக மீனவர்கள் 20 பேர் மட்டுமே பங்கேற்க யாழ்ப்பாணம் பிஷப் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். இதன் அடிப் படையில் ராமேசுவரம் பிஷப் 20 பேரை மட்டும் தேர்வு செய்து, அவர்கள் தொடர்பான தகவல் களை வெளியுறவுத் துறை அமைச்ச கத்துக்கு தெரிவித்துள்ளார். இவர்கள் விழாவில் பங்கேற்க தடையில்லா சான்று வழங்கப் பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து இந்த வழக்கில் ராமேசுவரம் பிஷப்பை எதிர் மனு தாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசா ரணையை நீதிபதிகள் டிச. 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.