

நாமக்கல்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் டிச.31 மற்றும் ஜன. 1-ம் தேதி ஆகிய இரு நாட்களில் ரூ.9 கோடியே 25 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் தினமும் ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை மதுபானம் விற்பனை நடைபெறும். இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை அதிகரித்தது.
இதன்படி, கடந்த டிச.31-ம் தேதி ரூ.5 கோடியே 10 லட்சத்துக்கும், ஜன.1-ம் தேதி ரூ.4 கோடியே 15 லட்சம் என மொத்தம் ரூ.9 கோடியே 25 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.