

கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து 190 விசைப் படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றனர்.
இதில், நெடுந்தீவு பகுதியில் 2 விசைப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராஜா, சோனைமுத்து, வீராசாமி, சுதாகர், முனியாண்டி, அம்ஜத்கான்,ஜெ.ராவுத் தர் ஆகியோரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களது 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் சங்கத் தினர் கூறும்போது, “மீனவர்கள் நலன் தொடர்பாக டெல்லியில் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழக மீனவர்களை தாக்க மாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால், அதன் பிறகு 2 முறை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.