

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளில் 2022-ம் ஆண்டில்தான் அதிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
குறிப்பாக, கரோனா தொற்றுக்குப் பிறகு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2022-ம் ஆண்டு மட்டும் 6.09 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாத வாரியாக:
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டில் மட்டும் 6,09,87,765 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 7 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் பயணங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஆண்டு வாரியாக:
கடந்த 2021-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் 2.53 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதை விட 3.56 கோடிக்கு அதிகமான பயணங்கள் 2022-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை மெட்ரோ ரயிலில் மொத்தம் 15,88,08,208 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.