மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன்
மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன்

தி இந்து ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்  

Published on

சென்னை: தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்," தி இந்து (The Hindu) ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த திரு.கே.வி.சீனிவாசன் (வயது 56), இன்று (ஜன.2) அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

கே.வி. சீனிவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த கே.வி.சீனிவாசன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in