

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜந்தர்மந்தரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
தென்னக நதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர்.