Published : 02 Jan 2023 04:45 AM
Last Updated : 02 Jan 2023 04:45 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ரூ.4.28 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபான பாட்டில்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர் மற்றும் அரக்கோணம் மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளன.
இதில், வேலூர் நிர்வாக மாவட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 123 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. புத்தாண்டுக்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அனைத்து வகை ரம், விஸ்கி, பிராந்தி போன்ற ‘ஹாட்’ வகைகளும், பீர் வகைகளும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகளவில் பீர் மற்றும் ஹாட் வகை மதுபாட்டில்கள் விற்பனையானது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத் தூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.4.28 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
2.76 கோடிக்கு மது விற்பனை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், புத்தாண்டு கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் மாலை முதல் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அதன்படி, பீர், ஹாட் உட்பட அனைத்து வகைகளையும் சேர்த்து நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 2.76 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT