

சென்னை: ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நீண்ட நாட்களுக்குப் பின் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, பொது நிகழ்ச்சிகளில் அவர் அதிக அளவு கலந்து கொள்வதும் இல்லை. இருப்பினும் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். இதன்படி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் இன்று (ஜன.1) வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொண்டர்களை சந்தித்ததால், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து கூறினார்.