

கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரி கள் சங்க செயலர் மூக்கையாண்டி கூறியது: இந்த மார்க்கெட்டில் மொத்தம் 356 பூ கடைகள் உள்ளன. அத்தனை கடையினரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இலவசமாக பூக்களை வழங்கினர். சுமார் 10 டன் பூக்கள் சேர்ந்தது.
அதை இரு லாரிகளில் ஏற்றி வந்து, ஊர்வலத்தில் பங்கேற்றோம். அதனால் அந்த வாகனத்தின் பின் பகுதியில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினோம் என்றார்.