திருச்சி | திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து - காயமின்றி தப்பிய 28 பயணிகள்

வெள்ளாளப்பட்டி அருகே நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
வெள்ளாளப்பட்டி அருகே நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து தம்மம்பட்டி வழியாக செந்தாரப்பட்டிக்கு 28 பயணிகளுடன் தனியார் பேருந்து நேற்று மதியம் புறப்பட்டது.

துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் பேருந்தை ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதைக்கண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அதிலிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். சில நிமிடங்களுக்குள் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. தகவலறிந்த உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

எனினும், அதற்குள்ளாக பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in