Published : 03 Dec 2016 09:16 AM
Last Updated : 03 Dec 2016 09:16 AM

ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மோடியிடம் பேசி உரிய அனுமதி பெற்றுத் தாருங்கள்: ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வைகோ வேண்டுகோள்

ஜல்லிக்கட்டின் முழுப் பின்ன ணியை பிரதமரிடம் எடுத்துக்கூறி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற் றுத் தாருங்கள் என்று தமிழக ஆளு நர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். பின்னர் அதுகுறித்து நிருபர்களுக்கு வைகோ அளித்த பேட்டி:

ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தோடும், பண்பாட்டோ டும் இணைந்து இருப்பதாக ஆளு நருக்கு விளக்கம் அளித்தேன். ஜல்லிக்கட்டு காளைகளை விவ சாயிகள் தங்கள் பிள்ளைகளைப் போலத்தான் வளர்க்கிறார்கள். தார்க்குச்சி கொண்டுகூட குத்த மாட்டார்கள். அப்படி இருக்கையில் ஜல்லிக்கட்டை மிருகவதை என்று சொல்லி உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு தடை விதித்தது.

ஆனால், அந்தத் தடையை நீக்கு வதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி களை மேற்கொண்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தாலும், தமிழக மக்கள் நடத்திய போராட்டங்களாலும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ஓர் அறிவிக்கை வெளி யிட்டது. ஆனால், காட்சிப் பொரு ளாகக் காட்டத் தடை விதிக்கப் பட்ட விலங்குகள் என்ற பட்டிய லில் இருந்து காளைகளை நீக்கவில்லை.

இச்சூழலில், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு, மிருக வதை தடை சட்டத்துக்கு எதிரானது என்று கூறி 2016 நவ.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, ஜல்லிக்கட்டின் முழுப் பின்னணியை அறிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தடை யாகவே இருக்கிறது. இதுகுறித்து பிரதமரிடம் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்கு உரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொண்டேன்.

ஜல்லிக்கட்டு விலங்கு வதை என்றால், நாடு முழுவதும் ஆடு, மாடு, கோழி வெட்டுகிறார்களே? அது வதை இல்லையா? அதை எப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனுமதிக்கிறார்கள்? மாடுகளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என் றாலும் கூட விவசாயிகள் தாங்க மாட்டார்கள். இறந்த மாடுகளுக்கு கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள் என்பதை எல்லாம் பிரதமரிடம் எடுத் துச் சொல்லுங்கள். தடையை நீக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

அதற்கு ஆளுநர் பதில் அளிக் கையில், “வரும் 10-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பிரதமரைச் சந்திப் பேன். உங்கள் வேண்டு கோளை அவரிடம் எடுத்துரைப் பேன்” என்று கூறியதாக வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x