Published : 30 Dec 2022 04:27 AM
Last Updated : 30 Dec 2022 04:27 AM

கோடநாடு வழக்கில் போலீஸார் உட்பட 3 பேரிடம் விசாரணை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் 320 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.

இந்நிலையில், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் 3 பேரின் மேற்பார்வையில் 3 தனிப்படை நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோத்தகிரி அருகே கெங்கரை கிராமத்தில், கோடநாடு எஸ்டேட்டில் கணினி பொறியாளராக பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை போஜன், மனைவி, சகோதரிகள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர்.

அதேபோல, இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி, சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற அன்று இதில் தொடர்புடைய 8 பேர் கேரளாவுக்கு செல்லும்போது, சந்தேகத்தின் பேரில் நீலகிரி போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மறுநாள் விடுவித்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று கூடலூரில் பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் மேலும் 2 பேரிடம் நேற்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்த விவகாரம் குறித்து, கூடலூரில் அதிமுகவின் வர்த்தக அணி மாநில அமைப்பாளரான சஜீவனின் சகோதரர்கள் அனீஸ், சாஜீ ஆகியோர் மீது தனிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது சிபிசிஐடி போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x