

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி யில் நேற்று காலை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாலுச்சாமி (63), மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவர், கடந்த 1984 முதல் 1989 வரை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.