

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக கடந்த 2004 முதல் 2009 வரை பதவி வகித்தவர் ஐஏஎஸ் அதிகாரி கே.சுரேஷ்.
இவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சுரேஷின் மனைவி கீதா உட்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மேலும் இவர் துறைமுக தலைவராக இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தில் தன் மகனை பொறியியல் படிப்பில் சேர்க்க, விஜயசாந்தி பில்டர்ஸ் என்ற தனியார் கட்டு மான நிறுவனத்திடமிருந்து கல்வி நிதியுதவியாக ரூ. 12 லட்சம் பெற்றதாகவும், அதற்கு பரிகார மாக அந்த நிறுவனத்திற்கு துறை முகத்தில் 2 எடைபோடும் நிலையம் அமைத்துக் கொடுத்ததாகவும் இவர் மீது சிபிஐ தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜவஹர், துறைமுக முன்னாள் தலைவர் சுரேஷுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.