Published : 30 Dec 2022 04:05 AM
Last Updated : 30 Dec 2022 04:05 AM

மயிலாப்பூரில் ராம்ராஜ் புதிய ஷோரூம் திறப்பு: அமைச்சர் சேகர் பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்

மயிலாப்பூரில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, ராம்ராஜ் நிறுவன தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர்.

சென்னை: ‘மதிப்பிற்குரியவர்களுக்கு..’ என்ற வாசகத்துடன் கம்பீரமாக வலம் வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தயாரிப்புகள் அந்தஸ்து, செல்வாக்கு, மரியாதையை சமூகத்தில் அளிக்க வல்லவை.

இத்தகைய பெருமை மிக்க ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சென்னை மயிலாப்பூரில் புதிய ஷோரூமை திறந்துள்ளது. விழாவுக்கு வந்தவர்களை ராம்ராஜ் நிறுவன தலைவர் நாகராஜ் வரவேற்றார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஷோரூமைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி முதல் விற்பனையைப் பெற்றுக்கொண்டார்.

விழாவில் மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, அண்ணா நகர் எம்எல்ஏ மோகன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் பங்கேற்றனர். புதிய ஷோரூமில் அட்ஜஸ்டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, உள்ளிட்ட ஏராளமான ரக வெட்டிகள் உள்ளன. பலவகை காட்டன்சட்டைகள், பார்டர் மேட்சிங் லினன்சட்டைகள் ஆகிய ரகங்களும் உள்ளன.

இளைஞர்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் டி-சர்டுகளும் உள்ளன. பெண்களுக்கு லெக்கிங்ஸ், சிம்மிஸ் மற்றும் அனைத்து விதமான உள்ளாடைகள் உள்ளன.ராம்ராஜ் நிறுவனம் www.ramrajcotton.in என்ற இணையதளம் மூலமும் விற்பனையைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ராம்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x