Published : 30 Dec 2022 04:13 AM
Last Updated : 30 Dec 2022 04:13 AM

உயிரிழப்பு தொடர்பாக 17 வழக்குகள் - ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் விளக்கம் தர சிபிசிஐடி நோட்டீஸ்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த பலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டனர். எனவே இதற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலிறுத்தி வந்தனர்.

இதையடுத்து ஆன்லைன்சூதாட்ட விளையாட்டுகள் குறித்து ஆய்வு செய்யச் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இந்த குழு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசிடம் அறிக்கை அளித்தது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டது.

இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்போது அது நிலுவையில் உள்ளது. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழக காவல் துறையின் சிபிசிஐடி போலீஸாரிடம் 17 வழக்குகள் வரை உள்ளன.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளக்கம்அளிக்குமாறு 6 ஆன்லைன்விளையாட்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. சூதாட்டசெயலிகள் எதன் அடிப்படையில் செயல்படுகின்றன. செயலிகளை உபயோகிப்பவர்கள் விளையாட்டில் தோற்றதைதாண்டி பணம் இழந்ததற்கு வேறு காரணங்கள் உள்ளதாஎனப் பல்வேறு விளக்கங்களைக் கேட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x