Published : 30 Dec 2022 04:20 AM
Last Updated : 30 Dec 2022 04:20 AM
சென்னை: ரயில்வே தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சாதியினருக்கு பழங்குடியினரைவிட குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயித்திருப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: ரயில்வேயில் குரூப் டி தேர்வுகள் மூலம் 1.03லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் நடந்தன.
இந்தத் தேர்வுகளிலும் எஸ்சி,எஸ்டி பிரிவினரைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சாதியினருக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண்களை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சிக்குரியது. பாரதஸ்டேட் வங்கியின் எழுத்தர் தேர்விலும் இதே நிலைதான் காணப்பட்டது. பிப்.3-ம் தேதி முதல் தமிழகம் தழுவிய அளவில் திராவிடர் கழகம் மேற்கொள்ளும் தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT